Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஸ்வரூபம் அப்போ குடும்பமா சென்று ஆதரவு தெரிவித்த சூர்யா… ஆனா இப்போ?

Advertiesment
விஸ்வரூபம் அப்போ குடும்பமா சென்று ஆதரவு தெரிவித்த சூர்யா… ஆனா இப்போ?
, புதன், 17 நவம்பர் 2021 (17:20 IST)
நடிகர் சூர்யா ஜெய்பீம்  பட பிரச்சனையில் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

நடிகர் சூர்யா நடிப்பில் தா.செ.ஞானசேகர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ஜெய்பீம். பழங்குடி மக்களுக்கு எதிராக நடக்கும் காவல்துறை அடக்குமுறைகளை எடுத்துக்காட்டும் விதமாக உருவான இந்த படத்தை சூர்யாவின் 2டி நிறுவனமே தயாரித்து அமேசான் ஓடிடி தளத்தில் வெளியிட்டது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் கடலூர் மாவட்டத்தில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்துத் தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றுள்ளது. இந்த படம் அமேசான் ஓடிடியில் தற்போது வெளியாகி மிகப்பெரிய பாராட்டுகளையும் வரவேற்புகளையும் குவித்தது.

ஆனால் படத்தில் வன்னிய சமூகத்தை இழிவுபடுத்தும் விதமாக காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்து அது சம்மந்தமாக பாமகவினர் சூர்யா மேல் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் சில பாமக நிர்வாகிகள் சூர்யாவை மிரட்டும் விதமாக பேசி வருவதால் அவருக்கு போலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் திரையுலகை சேர்ந்தவர்கள் சிலர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் விஸ்வரூபம் பிரச்சனை போது குடும்பமாக சென்று சூர்யா கமலுக்கு ஆதரவு தெரிவித்து இருந்தும் இப்போது கமலிடம் இருந்து ஒரு ஆதரவுக் குரல் எழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிம்புவின் மாநாடு படம் புதிய சாதனை