Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மகன் முகத்தை முதல் முறையாக வெளிப்படுத்திய காஜல் அகர்வால்!

மகன் முகத்தை முதல் முறையாக வெளிப்படுத்திய காஜல் அகர்வால்!
, வெள்ளி, 20 ஜனவரி 2023 (08:46 IST)
நடிகை காஜல் அகர்வால் தன்னுடைய குழந்தையின் முகத்தை வெளிப்படுத்தும் விதமாக வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நடிகை காஜல் அகர்வால் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்துவிட்டார். தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம் போன்ற வேற்று மொழி படங்களிலும் நடித்து தூள் கிளப்பி வருகிறார் காஜல். இந்நிலையில் கடந்த லாக்டவுனின் போது அவர் தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். அதையடுத்து கர்ப்பமான அவர், அதை ரசிகர்களுக்கு அறிவித்து, கர்ப்பகால புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார். அதையடுத்து சமீபத்தில் அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அந்த குழந்தைக்கு நீல் என பெயர் வைத்துள்ளனர். இதையடுத்து இதுவரை காஜல் தனது குழந்தையின் முகம் தெரியாதவாறு இருக்கும் புகைப்படங்களையே பகிர்ந்து வந்த நிலையில், தற்போது முதல் முறையாக குழந்தையின் முகம் தெரியும் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.

மேலும் தன்னுடைய குழந்தையின் பெயரில் புதிதாக ஒரு இன்ஸ்டாகிராம் கணக்கையும் தொடங்கியுள்ளார்.
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜனவரி 26ல் வெளியாகும் ‘அயலி’ வெப்தொடர்.. எந்த ஓடிடியில்?