அஜித் நடிக்கும் அடுத்த படத்தை இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்க உள்ள நிலையில் இப்போது முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன.
துணிவு படத்தின் ரிலீஸுக்கு முன்னதாகவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்து நடிக்க உள்ள அஜித் 62 ஆவது படத்தின் அறிவிப்பு வெளியாகி ரசிகர்களுக்கு டபுள் டிரீட்டாக அமைந்துள்ளது. சில மாதங்களுக்கு முன்னர் வெளியான அப்டேட்டின்படி அஜித்தின் 62வது திரைப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் உருவாக இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது.
இந்த படம் ஜனவரி இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. படத்தில் ஐஸ்வர்யா ராய் கதாநாயகியாக நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தில் அஜித் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையாக நடிக்க உள்ளதாகவும், குடும்ப செண்ட்டிமெண்ட் உணர்வுகளுக்கு இந்த படம் அதிக முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.