Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியல: அதனால என்ன செஞ்சேன் தெரியுமா? காஜல் அகர்வால்

Advertiesment
விஜய் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியல: அதனால என்ன செஞ்சேன் தெரியுமா? காஜல் அகர்வால்
, புதன், 20 செப்டம்பர் 2017 (21:59 IST)
இளையதளபதி விஜய் நடித்துள்ள 'மெர்சல்' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் இந்த படத்தின் போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தின் இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை இருப்பதால் படக்குழுவினர் இரவுபகலாக பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.



 
 
இந்த நிலையில் இந்த படத்தின் மூன்று நாயகிகளில் ஒருவராகிய காஜல் அகர்வால் விஜய்யுடன் நடனம் ஆடிய அனுபவம் குறித்து பேட்டி ஒன்றில் கூறியபோது, 'விஜய்யுடன் துப்பாக்கி, ஜில்லா ஆகிய படங்களில் நடனம் ஆடிய அனுபவம் இருந்தாலும் இந்த படத்தில் ஒரு பாடலில் ஒருசில சிறப்பு ஸ்டெப்ஸ்கள் இருந்தது. அந்த ஸ்டெப்ஸ்களை விஜய் சர்வசாதாரணமாக பிராக்டீசே இல்லாமல் ஆடிவிடுவார்.
 
ஆனால் நான் படப்பிடிப்பின்போது திணறக்க்கூடாது என்பதற்காக நடன ஆசிரியர் எனக்கு அந்த ஸ்டெப்பை முன்கூட்டியே சொல்லி கொடுத்தார். நான் அந்த ஸ்டெப்ஸை வீட்டில் விடிய விடிய ஆடி பழகினேன். சொல்லி வைத்தால் போல் விஜய்க்கு இணையாக முதல் ஷாட்டிலேயே அந்த ஸ்டெப்பை சரியாக ஆடி எல்லோரது பாராட்டையும் பெற்றேன். விஜய் ஒரு நல்ல டான்சர் என்பதால் அவருக்கு இணையாக ஆட முடியாவிட்டாலும், முன்கூட்டியே பிராக்டீஸ் செய்ததால் சமாளித்துவிட்டேன்' என்று பெருமையுடன் கூறியுள்ளார் காஜல்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித் ஓகே சொல்லனும்... ஏ.ஆர்.முருகதாஸ் வெய்ட்டிங்!!