கைதி படத்தின் மலேசிய ரீமேக் ‘பந்துவான்’… ப்ரமோட் செய்ய மலேசியா சென்ற கார்த்தி!

vinoth
செவ்வாய், 4 நவம்பர் 2025 (16:54 IST)
கார்த்தி, நரேன், அர்ஜுன் தாஸ் மற்றும் ஜார்ஜ் மரியான் உள்ளிட்டவர்கள் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸானது லோகேஷின் இரண்டாவது படமான ‘கைதி’. அந்த தீபாவளிக்கு விஜய்யின் ‘பிகில்’ திரைப்படமும் ரிலீஸானது. ஆனாலும் கைதி நின்று சண்டையிட்டு வெற்றி பெற்றது.

லோகேஷ் இயக்கிய கைதி திரைப்படம் அவரின் மிகச்சிறந்த படம் என்றும் சொல்லப்பட்டு வருகிறது. இதனால் அதன்  இரண்டாம் பாகத்தை இயக்க அவர் தயாராகி வருகிறார். இடையில் அவர் ரஜினி கமல் ஆகியோரை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. அது நடக்கும் பட்சத்தில் ‘கைதி 2’ தாமதம் ஆகும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் ‘கைதி’ திரைப்படம்  மலேசியாவின் மலாய் மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த படத்தில் கார்த்தி நடித்த கதாபாத்திரத்தில் டத்தோ ஆரோன் ஆஸிஸ் நடிக்க ‘பந்த்வான்’ என டைட்டில் வைக்கபப்ட்டுள்ளது. இந்த படத்தில் இணைத் தயாரிப்பாளராக ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.  இந்த படத்தின் டீசரை தற்போது ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் எஸ் ஆர் பிரபு வெளியிட்டுள்ளார். கைதி படத்தின் டீசரை அச்சு அசலாக மறு உருவாக்கம் செய்தது போல இந்த டீசர் உருவாகியுள்ளது.

இந்நிலையில் வரும் ஆறாம் தேதி இந்த படம் மலேசியாவில் வெளியாகும் நிலையில் அந்த படத்தை விளம்பரப் படுத்தும் விதமாக நடிகர் கார்த்தி மலேசியாவுக்கு சென்று படக்குழுவினரை சந்தித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

செலக்‌ஷன்ல மன்னன்பா! அருள்நிதி நடிப்பில் வெளியான ‘மை டியர் சிஸ்டர்’ பட புரோமோ

கருப்பு நிற உடையில் கலக்கல் போஸ் கொடுத்த மடோனா செபாஸ்டியன்!

தங்க நிற உடையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் ஹாட் & க்யூட் க்ளிக்ஸ்!

லெஜண்ட் சரவணனின் இரண்டாவது பட ரிலீஸ் அப்டேட்!

ஒல்லியாக இருப்பதற்கு ஊசிகளைப் பயன்படுத்துகிறேனா?... தமன்னா பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments