மாநகரம், கைதி ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விஜய் மற்றும் கமல் ஆகியோர் நடிப்பில் மாஸ்டர் மற்றும் விக்ரம் ஆகிய படங்களை இயக்கினார். இந்த இரு படங்களின் வெற்றி அவரை மோஸ்ட் வாண்டட் இயக்குனராக்கியது.
 
									
			
			 
 			
 
 			
					
			        							
								
																	சமீபத்தில் மீண்டும் விஜய் படத்தை இயக்கிய லோகேஷ் ரஜினி நடிப்பில் உருவாகும் கூலி படத்தை இயக்குகிறார். இந்த படத்தை முடித்துவிட்டு அடுத்து அவர் கைதி 2 படத்தை  இயக்குவார் என சொல்லப்படுகிறது.
 
									
										
			        							
								
																	இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பேசிய கார்த்தி “இந்த வருடத்தில் இரண்டு படங்களில் நடித்து முடித்துவிட்டேன். இரண்டும் அடுத்தடுத்து ரிலீஸ் ஆகும். அடுத்த ஆண்டு லோகேஷ் தயாராக இருக்க சொல்லியுள்ளார். அடுத்த ஆண்டு பிரியாணி பக்கெட்ட தூக்கிட வேண்டியதுதான்.” எனக் கூறியிருந்தார்.
 
									
											
							                     
							
							
			        							
								
																	இந்நிலையில் சமீபத்தில் லோகேஷ் சந்தித்த தயாரிப்பு நிறுவனம் லோகேஷுக்கு அந்த படத்துக்கான முன்பணத்தைக் கொடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டு முதல் பாதியில் கைதி 2 ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது.