Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரசிகர்களுக்கு எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன்… சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த மகிழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!

Advertiesment
ரசிகர்களுக்கு எப்போதும் நன்றி கடன் பட்டுள்ளேன்… சினிமாவில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த மகிழ்ச்சியில் ஸ்ருதிஹாசன்!

vinoth

, வெள்ளி, 26 ஜூலை 2024 (07:48 IST)
கமல்ஹாசன் சரிகா தம்பதியினரின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், அமெரிக்கா சென்று இசை சம்மந்தமாக படித்து வந்தார். கமல்ஹாசனின் உன்னைப் போல் ஒருவன் படத்துக்கு இசையமைத்த அவர் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். இந்தியில் இஷ்க் படத்தில் நடித்த அவரை ஏழாம் அறிவு படத்தின் மூலம் தமிழுக்குக் கொண்டுவந்தார் ஏ ஆர் முருகதாஸ்.

தமிழ் நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ருதிஹாசனை தெலுங்கு சினிமாவே மிகப்பெரிய ஸ்டார் நடிகை ஆக்கியது. தெலுங்கில் அறிமுகம் ஆனதில் இருந்தே நிறைய படங்களில் நடித்து வருகிறார். தெலுங்கில் பிரபாஸ் ஜோடியாக சலார் படத்தில் நடிக்கிறார்.

இந்நிலையில் இப்போது ஒரு நடிகையாக 15 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ஸ்ருதிஹாசன் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். அதில் “15 ஆண்டுகளைக் கடந்துள்ளேன் என்பதை என்னால் நம்பவே முடியவில்லை.  அதற்காக நான் எப்போதும் நன்றிக் கடன் பட்டுள்ளேன். நான் வளர்ந்த மாய உலகில், நடிகராக இருப்பது பாக்கியம்.  ரசிகர்களின் துணையின்றி நான் இந்த இடத்துக்கு வந்திருக்க மாட்டேன்” எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

யானையை விட்டு சிங்கத்துக்குத் தாவிய பிரபு சாலமன்… கவனம் ஈர்க்கும் மாம்போ போஸ்டர்!