சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள 'காலா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது என்றாலும் இந்த படத்தின் பிரிமியர் காட்சிகள் இன்று அரபு நாடுகள் மற்றும் அமெரிக்காவில் திரையிடப்படுகிறது. அந்த வகையில் ஐக்கிய அரபு எமிரேட் நாட்டில் படம் பார்த்த ஒருவர் 'காலா' படத்தின் முதல் விமர்சனத்தை இணையத்தில் பதிவு செய்துள்ளார்.
இந்த விமர்சனத்தில் மீண்டும் இணைந்துள்ள ரஜினி-ரஞ்சித் கூட்டணி மல்டிபிளக்ஸ் மனநிலையில் உள்ள ரசிகர்களின் மனநிலையை வைத்தே தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், ரஜினியின் வழக்கமான ஸ்டைல் மிஸ் ஆகியுள்ளதாகவும், இருப்பினும் ரஜினி ரசிகர்களை திருப்தி செய்ய ரஞ்சித் முயன்றுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் டெக்னிக்கலாக காலா' திரைப்படம் சிறப்பாக இருப்பதாகவும், குறிப்பாக குடிசைப்பகுதிகளின் கலை வேலைப்பாடுகள் சபாஷ் போட வைப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இருப்பினும் கதை, காட்சிகள், பாடல்கள் ஆகியவை குறித்து அந்த ரசிகர் எதுவும் குறிப்பிடவில்லை என்பதால் இந்த விமர்சனம் உண்மையிலேயே படம் பார்த்து எழுதப்பட்டதுதானா? அல்லது கற்பனையா? என்பது இன்னும் ஒருசில மணி நேரங்களில் தெரிந்துவிடும்