சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சமீபத்தில் தூத்துகுடி சென்று ஸ்டெர்லைட் போராட்டம் வன்முறையாக மாறியதற்கு காரணம் சமூக விரோதிகள் அந்த போராட்டத்தில் ஊடுருவியது தான் என்று கூறினார். மேலும் எதற்கெடுத்தாலும் போராடக்கூடாது அவ்வாறு போராடினால் தமிழ்நாடு சுடுகாடாகிவிடும் என்று கூறினார்.
ரஜினியின் இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்களில் ஒருவர் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன். ரஜினிக்கு தனது கடும் கண்டனத்தை அவர் பதிவு செய்தார். இந்த நிலையில் 'காலா' படத்தை ரிலீஸ் செய்ய முடியாது என்று கூறும் கன்னட அமைப்பினர்களுக்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்து காலாவுக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது:
திரைப்படத்தை திரைப்படமாகவே பார்க்க வேண்டும். காவிரி பற்றி கருத்து தெரிவித்ததற்காக காலா படத்தை கர்நாடகாவில் தடை செய்வது ஏற்புடையதல்ல. காலாவை தடை செய்வதால் பல்லாயிரக்கணக்கான திரைத்துறை தொழிலாளர்கள் வாழ்க்கை பாதிக்கப்படும்' என்று கூறியுள்ளார்.