Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Thursday, 10 April 2025
webdunia

'காலா' ஆடியோ ரிலீஸ் தேதி அறிவிப்பு: ரசிகர்கள் உற்சாகம்

Advertiesment
ரஜினிகாந்த்
, ஞாயிறு, 29 ஏப்ரல் 2018 (08:03 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் இந்த ஆண்டின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படமாக கருதப்படும் நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதியை இந்த படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் தனது டுவிட்டரில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.
 
அதன்படி இந்த படத்தின் பாடல்கள் வரும் மே 9ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. இருப்பினும் பாடல்கள் ரிலீஸ் விழா நடக்கும் இடம் குறித்த அறிவிப்பு இன்னும் வெளிவரவில்லை. காலா படத்தின் பாடல்கள் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பால் ரஜினி ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
 
webdunia
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் ஐந்து பாடல்கள் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதம் 7ஆம் தேதி என்பதை தனுஷ் அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பா.ரஞ்சித் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த், ஈஸ்வரிராவ், ஹூமாகுரேஷி, நானா படேகர், சமுத்திரக்கனி, உள்பட பலர் நடித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் விமர்சனம் (Avengers: Infinity War)