Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜோதிகாவை வாழ்த்திய சென்சார் அதிகாரிகள்

ஜோதிகாவை வாழ்த்திய சென்சார் அதிகாரிகள்
, ஞாயிறு, 25 ஜூன் 2017 (23:27 IST)
நீண்ட இடைவெளிக்கு பின்னர் ஜோதிகா நடித்த '36 வயதினிலே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் ஜோதிகா நடித்த அடுத்த படம் 'மகளிர் மட்டும்



 


இந்த படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணிகள் முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகவுள்ள நிலையில் இந்த படம் இன்று சென்சாருக்கு சென்றது.

இந்த படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு 'யூ' சான்றிதழ் கொடுத்துள்ளனர். இதனால் ஜோதிகா உள்பட படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் ஜோதிகாவின் நடிப்பை சென்சார் அதிகாரிகள் வெளியே வந்து புகழ்ந்து பேசியதாகவும் கூறப்படுகிறது

ஜோதிகா, நாசர், லிவிங்ஸ்டன், சரண்யா, பானுப்ரியா, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். 'குற்றம் கடிதல்' இயக்குனர் பிரம்மா இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு மணிகண்டன் ஒளிப்பதிவும், பிரேம் படத்தொகுப்பும் செய்துள்ளனர். இந்த படத்தில் கார்த்தி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிக்பாஸ்: இந்த கண்றாவியை 100 நாள் பார்த்து தொலையணுமா?