Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிக்பாஸ்: இந்த கண்றாவியை 100 நாள் பார்த்து தொலையணுமா?

Advertiesment
பிக்பாஸ்: இந்த கண்றாவியை 100 நாள் பார்த்து தொலையணுமா?
, ஞாயிறு, 25 ஜூன் 2017 (23:11 IST)
உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி இன்று ஆரவாரத்துடன் ஆரம்பமாகியது. இந்த நிகழ்ச்சியில் பங்குகொள்ளும் நபர்கள் என நேற்று ஒரு பட்டியல் வந்தது. அமலாபால், ராய்லட்சுமி, H.ராஜா, நாஞ்சில் சம்பத் என அந்த பட்டியலில் சுவாரஸ்யம் இருந்ததால் இந்த நிகழ்ச்சி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.



 


ஆனால் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் சென்ற அனைவருமே ஃபீல்ட் அவுட் ஆன நடிகர், நடிகையர் என்பதால் முதல் நாளிலேயே நிகழ்ச்சி களையிழந்ததாக டுவிட்டரில் பலர் விமர்சனம் செய்து வருகின்றனர். மேலும் நேற்று இருந்த பட்டியலில் உள்ள ஒருவர் கூட இன்றைய பட்டியலில் இல்லை

இன்றைய பட்டியலில் உள்ள பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் யார் யார் என்று பார்ப்போமா: நடிகர் ஸ்ரீ, நடிகை அனுயா, நடிகர் வையாபுரி, நடிகை காயத்ரி ரகுமார், நடிகர் பரணி, நடிகை ரெய்சா, சினேகன், நடிகை ஓவியா, நடிகை ஆர்த்தி, ஆரர், கஞ்சா கருப்பு, ஜூலியானா, கணேஷ் வெங்கட்ராமன், சக்தி ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். மேலும் முதலில் 14 பேர் என்றுதான் கூறப்பட்டது. இன்று கலந்து கொண்டவர்கள் 15 பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த 15 பேர்களை திரைப்படத்திலேயே காண சகிக்காது, இவர்களை 100 நாள் பார்த்து தொலைய வேண்டுமா? என்று ஒருவர் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பவர்பாண்டி 2' படத்தில் ராஜ்கிரணா? ரஜினியா?