Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

உன் மாமனார் பணத்துல கட்டல - நடிகை ஜோதிகாவின் திமிர் பேச்சால் கடுப்பான நெட்டிசன்ஸ்!

உன் மாமனார்  பணத்துல கட்டல - நடிகை ஜோதிகாவின் திமிர் பேச்சால் கடுப்பான நெட்டிசன்ஸ்!
, செவ்வாய், 21 ஏப்ரல் 2020 (10:14 IST)
தமிழ் சினிமாவின் நட்சத்திர குடும்பங்களில் ஒன்றான சிவகுமார் குடும்பத்தில் சூர்யா, ஜோதிகா , கார்த்தி உள்ளிட்ட அனைவருக்கும் ஏகப்பட்ட நட்சத்திர பட்டாளங்கள் உள்ளனர். இந்த குடும்பம் படத்தில் நடிப்பது மட்டுமின்றி சமூக அக்கறை கொண்டு சமூகத்திற்கு தேவையான பல உதவிகளை முன் வந்து செய்பவர்கள்.

அதன் ஒரு பகுதியாக பார்க்கப்படுவது தான் "அகரம் அறக்கட்டளை ". இந்நிலையில் சூர்யாவின் மனைவி ஜோதிகா கணவர், குழந்தைகள் என சில வருடம் சினிமாவிற்கு முடக்கு போட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் சமூக அக்கறை கொண்ட படங்களாக தேர்வு செய்து நடித்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸில் களமிறங்கியுள்ளார். இதற்காக சமீபத்தில் நடைபெற்ற JFW சினிமா விருதுகள் நிகழ்ச்சியில் நடிகை ஜோதிகாவிற்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.

webdunia

அப்போது பேசிய ஜோதிகா தஞ்சை பெரிய கோயில் கட்டுவதற்கெல்லாம் இவ்வளவு செலவுகள் செய்ய வேண்டுமா? கோயில் உண்டியலில் காசு போடாதீர்கள் அதற்கு பதிலாக மருத்துவமனை மற்றும் பள்ளிக்கூடங்கள் கட்டுங்கள் என்று கூறினார். இதனால் கடுப்பான சில நெட்டிசன்ஸ்  லட்சக்கணக்கில் செலவு செய்து மேக்கப் போடுவது, கோடிகளை கொட்டி படம் எடுப்பது, உடை, கார்  லொட்டு லொசுக்குனு ஆடம்பரத்திற்காக செலவு செய்வதை விட்டுவிட்டு மருத்துவமனை , பள்ளிகூடம் காட்டலாமே என கேள்வி கேட்டதுடன் " உன் மாமனார் காசுல அந்த கோயிலை கட்டல ராஜராஜர் தன் பக்தியால் காட்டினார் என ஜோதிகாவிக்ரு அறிவுரைகூறி ஆளாளுக்கு திட்டி தீர்த்து வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"மாஸ்டர்" பட்ஜெட் இவ்ளோவ் தான் - ஆனால், லோகேஷ் கனகராஜ் சம்பளம் கேட்டால் ஆடி போயிடுவீங்க!