Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜூனியர் என்.டி.ஆர்- கொரடலா சிவா இணைந்த புதிய பட டைட்டில் ரிலீஸ்

devara
, வெள்ளி, 19 மே 2023 (22:37 IST)
தெலுங்கு திரையுலகின் முன்னணி இயக்குனரான கொரடலா சிவா இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்தில் ஜூனியர் என்டிஆர் நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன் பூஜை போடப்பட்ட நிலையில், ஜூனியர் என்டிஆர் 30 என்ற படத்தின் இசையமைப்பாளராக அனிருத் ஒப்பந்தமானார். ஜான்வி கபூர் கதாநாயகியாக நடிக்க, சைஃப் அலிகான் வில்லன் வேடத்தில் நடிப்பதாக தகவல் வெளியானது.

இந்த படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட் நிலையில், ரூ.1000 கோடிக்கு மேல் வசூலித்த RRR படத்துக்குப் பிறகு ஜூனியர் என் டி ஆர் நடிக்கும் படம் என்பதால் இந்த படத்துக்கு இந்திய அளவில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த  நிலையில்,  இன்று இப்படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி,  ஜூனியர் என்.டி.ஆரின் 30வது படத்திற்கு ''தேவரா'' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த பர்ஸ்ட்லுக் போஸ்டர் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அருள்நிதியின் 'கழுவேத்தி மூர்க்கன்' பட டிரைலர் ரிலீஸ்