Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சமந்தாவால் நிறுத்தப்பட்ட குஷி படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?

சமந்தாவால் நிறுத்தப்பட்ட குஷி படத்தின் ஷூட்டிங் தொடங்குவது எப்போது?
, புதன், 1 பிப்ரவரி 2023 (09:54 IST)
கீர்த்தி சுரேஷ் துல்கர் சல்மான் நடித்த நடிகையர் திலகம் என்ற திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் நடித்திருந்தனர். இதையடுத்து மீண்டும் இவர்கள் இருவரும், ஷிவ் நிர்வானா இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் குஷி படத்தில் இணைந்துள்ளனர்.

இந்த படத்தின் ஷூட்டிங் நடந்துவந்த நிலையில் ஒரு விபத்துக் காரணமாக நிறுத்தப்பட்டது. பின்னர் சமந்தாவின் உடல்நலப் பிரச்சனைக் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இப்போது சமந்தா உடல்நலம் சரியாகி மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்தி வரும் நிலையில் விரைவில் குஷி படத்தின் ஷூட்டிங்கில் இணைவார் என்று சொல்லப்படுகிறது. தற்போது சமந்தா ராஜ் மற்றும் டி கே இயக்கத்தில் உருவாகும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சசிகுமாரின் ‘அயோத்தி’ படத்தின் மீது கதை திருட்டு சர்ச்சை… பிரபல எழுத்தாளர் குற்றச்சாட்டு!