Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போராட்டத்தில் குதித்த தனது ரசிகர்கள்களுக்கு வேண்டுகோள் விடுத்த சூர்யா

Advertiesment
போராட்டத்தில் குதித்த தனது ரசிகர்கள்களுக்கு வேண்டுகோள் விடுத்த சூர்யா
, சனி, 20 ஜனவரி 2018 (11:45 IST)
பிரபல தொலைக்காட்சியில் இரண்டு தொகுப்பாளினிகள் சூர்யாவின் உயரத்தை கிண்டல் அடித்தது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து  பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் தங்களது கருத்தை வெளிப்படுத்தி இருந்தனர்.
கே.வி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படத்தில்  ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க அமிதாப் பச்சனுடன் பேச்சுவார்த்தை நடந்ததாகக் கூறப்படுகிறது. பிரபல  தொலைக்காட்சியில் கிசுகிசு நிகழ்ச்சி ஒன்றின் தொகுப்பாளினிகளாக இருக்கும் நிவேதிதா மற்றும் சங்கீதா சூர்யாவின் உயரத்தை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளனர். இந்த பிரச்சனையால் கடும் கோபத்தில் இருந்த சூர்யா ரசிகர்கள் இன்று காலை சூர்யா பற்றி விமர்சித்த தொலைக்காட்சி முன் அவர்கள் மன்னிப்பு  கேட்ட வேண்டும் என்று போராட்டம் நடத்தியுள்ளனர்.
webdunia
இந்நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய சமூக வலைதளத்தில், தரம் தாழ்ந்த விமர்சனங்களுக்காக, நம் தரத்தை நாம் குறைத்துகொள்ள வேண்டாம். உங்களின்  நேரத்தையும், சக்தியையும் பயனுள்ள செயல்களுக்கு செலவிடுங்கள், சமூகம் பயன் பெற என்று ட்விட்டரில் பதிவு செய்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகர் ஜெகன் சென்ற கார் மோதி வாலிபர் மரணம்....