Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சூர்யாவுக்கு ஆதரவாக கோதாவில் களமிறங்கிய விஷால்

Advertiesment
சூர்யாவுக்கு ஆதரவாக கோதாவில் களமிறங்கிய விஷால்
, வெள்ளி, 19 ஜனவரி 2018 (09:18 IST)
நடிகர் சூர்யாவின் உயரம் குறித்து சர்ச்சை கருத்து பதிவிட்ட தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் தொகுப்பாளினிகளை, நடிகர் விஷால் வன்மையாக கண்டித்துள்ளார்.
விக்னேஷ் ஷிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் திரைப்படம் வெளியாகி தமிழகம் அல்லாது பிற மாநிலங்களிலும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதன் வெற்றியைத் தொடர்ந்து, அயன் பட இயக்குனர் கே.வி ஆனந்தின் அடுத்த படத்தில் நடிகர் சூர்யா நடிக்க இருப்பதாகவும், அப்படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் நடிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
 
இந்த நிலையில் சன் மியூசிக்கில் பேசிய இரண்டு தொகுப்பாளினிகள் சூர்யா படத்தில் அமிதாப் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாகவும், இருவரும் சேர்ந்து நடிக்கும் காட்சியில் சூர்யா ஸ்டூல் போட்டுத்தான் நடிக்க வேண்டும் என்று ஒரு தொகுப்பாளினி கிண்டலடித்தார். அதற்கு இன்னொரு தொகுப்பாளினி, இருவரையும் உட்கார வைத்து படமாக்கினால் உயரம் பிரச்சனை வராது என்றும் கலாய்த்தார். இந்த இரண்டு தொகுப்பாளினிகளுக்கும் சூர்யாவின் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். 
 
இந்நிலையில் சூர்யாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் நடிகர் விஷால் தனது டிவிட்டர் பக்கத்தில் சூர்யாவை கிண்டலடித்த அந்த தொகுப்பாளினிகளை கடுமையாக திட்டியுள்ளார், நகைச்சுவை என்ற பெயரில் நீங்கள் செயல் மிகவும் கீழ்த்தரமானது என பதிவிட்டுள்ளார்.

webdunia

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

'அருவி' தயாரிப்பாளரை ஆத்திரப்பட வைத்த விஜய் ரசிகரின் டுவீட்