பிக்பாஸ் புகழ் ஜூலி பி.எம்.டபுள்யூ காரில் டிரைவர் இருக்கையில் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்காக மெரினாவில் நடந்த போராட்டம் மூலம் சமூக வலைதளங்களில் பிரபலமான ஜூலி, விஜய் டிவி நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தமிழகம் முழுவதும் மிகவும் பிரபலமானார்.
ஆனால் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் அவருக்கு நிறைய கெட்டப் பெயர் கிடைத்தது. அதன்பின் அவரை நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்க்க தொடங்கிவிட்டனர். ஜூலி எந்த ஒரு பதவி போட்டாலும் அதற்கு நெட்டிசன்கள் கலாய்ப்பது வழக்கமாகிவிட்டது.
இந்நிலையில் ஜூலி பி.எம்.டபுள்யூ காரில் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதற்கு நெட்டிசன்கள் சரமாரியாக கலாய்த்துள்ளனர்.
ஒருவர், என்னடா இது பி.எம்.டபுள்யூக்கு வந்த சோதனை என்றும் ஜீரோ கிலோமீட்டர் வேகத்தில கார் ஓட்டுன ஒரே ஆளு நீதான் ஜூலி என்றும் நெட்டிசன்கள் கேலி செய்து பதிவிட்டுள்ளனர்.