Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ட்விட்டருக்கு கும்பிடு போட்டு இன்ஸ்டாவுக்கு தாவிய ஜூலி - காரணம் இதுதான்!

Advertiesment
ட்விட்டருக்கு கும்பிடு போட்டு இன்ஸ்டாவுக்கு தாவிய ஜூலி - காரணம் இதுதான்!
, வியாழன், 21 மே 2020 (14:50 IST)
ஜல்லிக்கட்டு போராட்டம் மூலம் அறிமுகமாகி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்களின் ஆதரவு மற்றும் வெறுப்பையும் சம்பாதித்தார். முதல்  சீசன் முடிந்து இரண்டாவது சீசனும் முடிந்துவிட்டது. ஆனால் இன்னும் ஜூலியை கிண்டல் செய்வதை நிறுத்தவில்லை நெட்டிசன்கள். பல நெகடிவ் இமேஜ்களை பெற்றாலும் அதன் பிறகு விளம்பரம், ரியாலிட்டி ஷோ, பட வாய்ப்பு என படு பிஸியாக ஆகிவிட்டார். அதே போல இவர் என்ன செய்தாலும் கலாய்ப்பதற்கென்று இன்னுமும் ஒரு கூட்டமும் இருந்துகொண்டு தான் வருகிறது.

அதற்கு ஏற்றார் போல ஜூலியும் இடைவிடாமல் அடுத்தடுத்து கன்டென்ட் கொடுத்துக்கொண்டு தான் வருகிறார். தன்னை கிண்டல் செய்பவர்களுக்கு பெரிதாக ரியாக்ட் செய்யாவிட்டாலும் சில சமயம் கடுப்பாகி நெத்தியடி பதில் கொடுத்து கிண்டல் செய்பவர்களின் மூக்கை உடைப்பார். ட்விட்டரில் அவர் என்ன கருத்து சொன்னாலும் நெட்டிசன்ஸ் கண்டம் செய்துவிடுவதால் அந்த பக்கம் தலையே காட்டுவதில்லையாம் ஜூலி.

மாறாக இன்ஸ்டாகிராமில் நுழைந்து வித்அவுட் மேக்கப்பில் எக்கச்சக்க போட்டோக்களை அள்ளிவீசியுள்ளார். அது அத்தனைக்கும் நல்ல கமெண்ட்ஸ் மட்டும் வருகிறதென்றால் பாருங்களேன். ஒருவரும் திட்டுவதில்லை , கேலி கிண்டல் செய்வதில்லை என்பதால் ட்விட்டரை மூட்டை கட்டிவிட்டு இன்ஸ்டாவில் குடிமூழ்கி விட்டாராம். வாழ்த்துக்கள் ஜூலி எல்லா விஷயத்தையும் இப்படி sportive ஆக எடுத்துக்கொண்டு வாழ்க்கையில் முன்னேறி செல்லுங்கள்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சன் டிவி சீரியலில் நடிகர் விஜய் சேதுபதி - தீயாய் பரவும் வீடியோ!