Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஜய் பாடலை டைட்டிலாக வைத்த கெளதம் மேனன் - அடுத்த படம் இது தான்!

Advertiesment
விஜய் பாடலை டைட்டிலாக வைத்த கெளதம் மேனன் - அடுத்த படம் இது தான்!
, வியாழன், 21 மே 2020 (09:57 IST)
இளம் தலைமுறையின் காதல், பாசம், நேசம், வலி முதலானவற்றைப் படமாக்குவர்களில் ஒருவர் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன்.  தமிழ் சினிமா இயக்குனர்கள் அவரவர் ஸ்டைலை தங்கள் படங்களில் கல்வெட்டுகள் போல் பொறித்தார்கள். ‘இது இன்னாருடைய படம்’ என்று முத்திரை பதித்தார்கள். அந்தவகையில், முத்திரை பதித்த இயக்குனர் பட்டியலில் சற்று வித்யாசமாக , ஸ்டைலீஷாகப் படம் பண்ணும் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன்.

அந்தவகையில் தன்னுடைய படங்களில் கொஞ்சம் காஃபி - கொஞ்சும் ஆங்கிலம், புத்தகம், கிட்டார், அழகான குடும்பம், அன்பான வார்த்தைகள், அண்ணா நகர் நண்பர்கள், லாஜிக்கான ஹீரோயிசம், உணர்வுபூர்வ உரையாடல் அற்புதமான காதல் உணர்பூர்வமான காமம் இவையனைத்தும் ஓர் படத்தில் கொண்டு வர கௌதம் மேனனால் மட்டுமே முடியும் என்பதை தன் ஒவ்வொரு படங்களின் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபிப்பார்.

யார் சொன்னது சினிமா சம்மந்தப்பட்ட படிப்பை படித்தால் மட்டுமே இயக்குனர் ஆகமுயுமென்று ஆர்வமிருந்தால் யார்வேண்டுமானாலும் நல்ல அற்புதமான படங்களை கொடுக்கலாம் என்ற சினிமாவின் இயக்கனத்தை உடைத்தெரிந்த பெருமை கெளதம் மேனனையே சேரும். இவரை இன்ஸ்பிரஷனாக வைத்து சினிமா துறையில் நுழைந்த பொறியியல் மாணவர்கள் ஏராளம்.

மாதவனின் "மின்னலே" படத்தில் ஆரம்பித்து "காக்க காக்க", ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’‘, "விண்ணைத் தாண்டி வருவாயா", "வாரணம் ஆயிரம்", ‘அச்சம் என்பது மடமையடா’, படங்களை தொடர்ந்து ‘எனை நோக்கிப் பாயும் தோட்டா’, விக்ரமுடன் ‘துருவநட்சத்திரம்’ என எப்பேர்ப்பட்ட படமாக இருந்தாலும், கவுதம் வாசுதேவ்மேனனுக்கு ஒரு மேக்கிங் ஸ்டைல் உண்டு. அதுதான் அவருக்கான ரசிகப் பட்டாளத்தை, கொஞ்சம்கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இப்போது இந்த கொரோனா ஊரடங்கிலும்      "கார்த்திக் டயல் செய்த எண்" குறும்படத்தின் மூலம் அனைவரையும் காதலில் கட்டி இழுத்துள்ளார்.

இந்நிலையில் தனது அடுத்த படத்திற்கான வேலைகளை விறுவிறுப்பாக துவங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.  கெளதம் மேனன் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் - வர்ஷா பொல்லம்மா நடிக்கும் இந்த புது படத்திற்கு " செல்ஃபி" என பெயரிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இது விஜய்யின் கத்தி படத்தில் இடம் பெற்ற செல்ஃபி புள்ள பாடலில் இருந்து தான் தலைப்பாக வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு மெல்லிசான புடவை... இருட்டு அறையில் காம பார்வையால் கவர்ந்திழுக்கும் யாஷிகா!