ஜோக்கர் பட ஹீரோவுக்கு உண்மையிலேயே மனநோயா?
ஜோக்கர் பட ஹீரோவுக்கு மனநோய்?
ஜோக்கர் திரைப்படத்தில் மன்னர் மன்னர் கதாபாத்திரத்தில் நடித்த கதாநாயகனுக்கு உண்மையிலே தனக்கு மனநோய் வந்துவிட்டதாக என்று அச்ச பட்ட செய்தி வெளியே கசிந்துள்ளது.
எழுத்தாளர் ராஜூமுருகன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் ஜோக்கர். சமூக அவலங்களை தோலுரித்துக் காட்டிய இந்த படத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட கதாபாத்திரமாக குருசோமசுந்தரம் நடித்திருந்தார்.
இந்நிலையில், அப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின்பும், சோம சுந்தரத்தால் அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வரமுடியாமல் தவித்தாராம். ஒரு கட்டத்தில் தான் உண்மையிலேயே மனநோயால் பாதிக்கப்பட்டு விட்டோமோ என்று அவருக்கே சந்தேகம் ஏற்பட்டதாம்.
அதன்பின் கொஞ்சம் கொஞ்சமாக மனதை கட்டுப்படுத்தி, களரி கலையை பயிற்சி செய்து அந்த கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வந்தாராம்.