கரீனா கபூர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். கர்ப்பமாக இருக்கையில் கடினமான காட்சிகளில் நடிக்காதீங்க என்று கரிசனத்துடன் சொன்னாலும் கரீனாவுக்கு கோபம் வருகிறது. ஏன் நடித்தால் என்ன என்று எதிர்கேள்வி போடுகிறார்.
கோல்மால் படத்தின் நான்காம் பாகம், கோல்மால் அகைய்ன் படத்தில் கரீனா கபூர் நடிக்கிறாரா இல்லையா என்று பாலிவுட்டில் பட்டிமன்றம். அவர் கர்ப்பமாக இல்லாமலிருந்தால் இந்த கேள்வியே எழுந்திருக்காது. காப்பமாக இருப்பதால் கரீனா நடிப்பாரா இல்லையா என்று சந்தேகம்.
இந்த விவகாரத்தில் பதிலளித்த கரீனா, நான் கர்ப்பமாக இருக்கிறேன், இல்லை, அதற்கென்ன. கர்ப்பமாக இருந்தால் நடிக்கக் கூடாதா? உங்களுக்கு என்ன தேவை அதை மட்டும் பாருங்கள். என்னைப் பத்தி உங்களுக்கு என்ன கவலை. என்னைப் பற்றி நான் கவலைப்பட்டுக் கொள்கிறேன் என்று காட்டமாக கூறியுள்ளார்.