Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

அரபிக்குத்து புகழ நடன இயக்குனர் ஜானி மீது பாலியல் புகார்… கைதாகிறாரா?

அரபிக்குத்து புகழ நடன இயக்குனர் ஜானி மீது பாலியல் புகார்… கைதாகிறாரா?

vinoth

, திங்கள், 16 செப்டம்பர் 2024 (15:25 IST)
தென்னிந்தியாவின் தற்போதைய மோஸ்ட் வாண்டட் நடன இயக்குனர்களில் ஒருவர் ஜானி மாஸ்டர். இவர் நடனம் வடிவமைத்த புட்ட பொம்மா மற்றும் அரபிக்குத்து மற்றும் ரஞ்சிதமே போன்ற பாடல்கள் வைரல் ஹிட்டாகின. அதுமட்டுமில்லாமல் அந்த பாடல்களின் ரீல்ஸ்களால் சமூகவலைதளங்கள் நிரம்பி வழிந்தன. இந்நிலையில் இப்போது அவரே ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

இவர் ஹீரோவாக நடிக்கும் யத ரஜா தாதா பிரஜா என்ற படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை சினிமா பண்டி என்ற படத்தை இயக்கி கவனம் பெற்ற ஸ்ரீனிவாஸ் விட்டலா இயக்குகிறார். படத்தின் தொடக்க நிகழ்ச்சி சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன.

இந்நிலையில் இப்போது ஒரு பெண் பாலியல் புகார் அளித்துள்ளார். தெலங்கானாவில் இவர் மேல் இப்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு இவரோடு இணைந்து பணியாற்றிய ஒரு டான்ஸர் பெண் அளித்த புகாரை அடுத்து ஜானி மேல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர் கைதாகலாம் என்ற சூழல் உருவாகியுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

7 ஜி ரெயின்போ காலணி 2 படத்தில் இருந்து யுவன் விலகலா?