Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜூனியர் என் டி ஆர் படத்தில் ஜான்வி கபூர்… பேச்சுவார்த்தை தொடக்கம்!

ஜூனியர் என் டி ஆர் படத்தில் ஜான்வி கபூர்… பேச்சுவார்த்தை தொடக்கம்!
, புதன், 9 ஜூன் 2021 (18:41 IST)
நடிகை ஸ்ரீதேவி மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக உருவாகி வருகிறார்.

தெலுங்கில் பிரபல ஸ்டார் நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்.டி.ஆர். இவர் தற்போது இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் உருவாகியுள்ள ஆர்.ஆர்.ஆர் படத்தில் நடித்துள்ளார். ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகிய இரு பிரபல ஹீரோக்கள் ஒன்றாக இணைந்து நடித்துள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தை தொடர்ந்து மற்றுமொறு பிரம்மாண்ட இயக்குனரின் படத்தில் நடிக்க உள்ளார். கேஜிஎஃப் படத்தை இயக்கிய கன்னட இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் தனது அடுத்த படத்தை ஜூனியர் என்.டி.ஆர் நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தற்போது கேஜிஎஃப் 2ம் பாகத்தை தொடர்ந்து பிரபாஸ் உடனான சலார் படத்தில் பிஸியாக உள்ள பிரசாந்த் நீல் அந்த பணி முடிந்ததும் ஜூனியர் என்.டி,ஆர் படத்தை தொடங்குவார் என கூறப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு ஜூனியர் என்.டி.ஆர் பிறந்தநாளான அன்று அறிவிக்கப்பட்டது. இதுவரை இந்த படத்தின் கதாநாயகி பற்றி அறிவிக்கப்படாத நிலையில் இப்போது ஜான்வி கபூரிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது. அப்படி இந்தபடத்தில அவர் நடித்தால் தெலுங்கில் அவர் நடிக்கும் முதல்படமாக இருக்கும்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நிதீஷ் வீரா மரணத்தால் பாதிக்கப்பட்ட படம்… மறுபடியும் ஷூட்டிங்கா!