Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

`வால்மீகி’யான ஜிகர்தண்டா...தெலுங்குக்குப் போகும் அதர்வா

`வால்மீகி’யான ஜிகர்தண்டா...தெலுங்குக்குப் போகும் அதர்வா
, வெள்ளி, 29 மார்ச் 2019 (12:27 IST)
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், லட்சுமி மேனன், பாபி சிம்ஹா, கருணாகரன் நடித்திருந்த படம் ஜிகர்தண்டா.

மதுரையில் வசிக்கும் ரவுடி ஒருவரை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த இந்த படம் கடந்த 2014ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டடித்தது. இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார். படத்தில் `அசால்ட் சேதுவாக' அலப்பறையைக் கூட்டியிருந்த பாபி சிம்ஹாவுக்கு தேசிய விருது கிடைத்தது. வசூலிலும் சரி விமர்சனரீதியாகவும் சரி படம் நல்லபெயரைப் பெற்றுத்தந்தது. படத்துக்குக் கிடைத்த வரவேற்பால் ரீமேக் உரிமை பல மொழிகளில் வாங்கினர். 
webdunia

 
இப்படியிருக்க 5 ஆண்டுகளுக்குப் பின்னர் சத்தமில்லாமல் தெலுங்கில் ரீமேக்காகிறது ஜிகர்தண்டா. வால்மீகி என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் தெலுங்கில் ஹீரோவாக நடிகர் அதர்வா அறிமுகமாகிறார். ஜிகர்தண்டா படத்தில் சித்தார்த் நடித்திருந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். ஹரிஷ் சங்கர் இயக்கத்தில் உருவாகும் லட்சுமி மேனன் கதாபாத்திரத்தில் மிருணாளினி, பாபி சிம்ஹா கதாபாத்திரத்தில் வருண் தேஜ் ஆகியோர் நடித்து வருகிறார்கள். முதல் ஷெட்யூலை பரபரப்பாக முடித்துள்ள படக்குழு, விரைவில் இரண்டாவது ஷெட்யூலைத் தொடங்க இருக்கிறது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தள்ளிப்போகும் சூப்பர்ஸ்டார் பட ஷூட்டிங்.. சர்கார் சூத்திரத்தை கையிலெடுத்திருக்கும் முருகதாஸ்!!!