Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பேட்ட சேப்டர் க்ளோஸ்... தயாரிப்பாளரை செருப்பால் அடிக்க வேண்டும்?

Advertiesment
பேட்ட சேப்டர் க்ளோஸ்... தயாரிப்பாளரை செருப்பால் அடிக்க வேண்டும்?
, புதன், 9 ஜனவரி 2019 (18:11 IST)
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினி, விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பேட்ட.  

 
இந்த படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10 ஆம் தேதி (நாளை) வெளியாகிறது. இதே தினத்தில் விஸ்வாசம் படமும் வெளியாக உள்ளதால் தமிழகத்தில் தியேட்டர்கள் சரிசமமாக பிரித்து இரு படங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது.  
 
ஆனால், தெலுங்கில் பேட்ட படத்திற்கு 10 சதவீத தியேட்டர் கூட கிடைக்காமல் திணறிவருகிறது. ஆம், பொங்கலை முன்னிட்டு அங்கு பாலகிருஷ்ணா நடிக்கும் என்.டி.ஆர் மற்றும் ராம்சரண் நடிக்கும் வினய விதேய ராமா ஆகிய படங்கள் வெளியாகின்றன.  
webdunia
இந்த இரு படங்களுமே பெரிய ஹிரோக்களின் படங்கள் என்பதால் 90 சதவீத தியேட்டர்களை இவ்விரு படங்களுமே கைப்பற்றிவிட்டன. இந்நிலையில் தற்போது பேட்ட படத்தின் தெலுங்கு வெளியீட்டு உரிமையை கைப்பற்றியுள்ள அசோக் வல்லபனேனி பேச்சால் பெரும் சர்ச்சை உருவாகியுள்ளது.
 
பேட்ட தெலுங்கு பிரமோஷன் நிகழ்ச்சியின் போது அசோக் வல்லபனேனி அல்லு அரவிந்த், தில் ராஜு மற்றும் யூவி க்ரியேஷன்ஸ் உள்ளிட்ட தயாரிப்பாளர்களை நாயுடனும்  மாஃபியாக்களுடனும் ஒப்பிட்டு பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார். 
 
அதோடு நிறுத்தாமல், குறிப்பிட்ட தயாரிப்பாளர்களின் குடும்பங்கள் குறித்து தவறாகப் பேசியதோடு, இந்த தயாரிப்பாளர்களை செருப்பால் அடிக்க வேண்டும் என கடுமாக விமர்சித்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். எனவே, பேட்ட படமும் நாளை வெளியாயுள்ள நிலையில் சர்ச்சையில் சிக்கியுள்ளது. இதனால் ரிலீஸ் பிரச்சனை ஏதேனும் வருமா என தெரியவில்லை...

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அஜித்துடன் டூயட் செய்யும் நயன் "வானே வானே" வீடியோ பாடல் வெளியானது !