தமிழ் சினிமாவில் பாரதி கண்ணம்மா, பொற்காலம் மற்றும் ஆட்டோகிராப் உள்ளிட்ட படங்கள் மூலமாக முத்திரைப் பதித்தவர் இயக்குனர் சேரன். ஆட்டொகிராப் திரைப்படத்தின் மூலமாக நடிகராகவும் அறிமுகமாகி, பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஆனால் ஒரு கட்டத்தில் அவருக்கு படங்கள் இயக்க வாய்ப்புகள் அமையவில்லை.
இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அதையடுத்து அவர் இப்போது ஒரு வெப் தொடரை இயக்கி முடித்துள்ளார். சேரன் இயக்கும் இந்த தொடரில் ஆரி முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கலையரசன், திவ்யபாரதி உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் மேலும் சில முக்கிய நடிகர்கள் நடிக்க இருப்பதாகவும் இந்த தொடர் விவசாயம் சம்மந்தப்பட்டதாக இருக்கும் என சொல்லப்படுகிறது.
முன்னணி நிறுவனமான சோனி லிவ் தளம் பைனான்ஸ் செய்ய இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார் சேரன். இந்த தொடர் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.