Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

சாதனை படைத்த ஷாருக் கானின் ஜவான் பட ஆடியோ விற்பனை!

சாதனை படைத்த ஷாருக் கானின் ஜவான் பட ஆடியோ விற்பனை!
, சனி, 1 ஜூலை 2023 (16:17 IST)
பாலிவுட்  சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான ஷாருக்கான் நடிப்பில் தமிழ் இயக்குனர் அட்லி இயக்கும் ஜவான் திரைப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. இந்த படத்தில் தமிழ் நடிகர்களான விஜய் சேதுபதி, நயன்தாரா மற்றும் யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்துக்கு அனிருத் இசையமைப்பாளராக பணியாற்றுகிறார். அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் முதல் படமாக ஜவான் அமைந்துள்ளது. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் உரிமையை டி சீரிஸ் நிறுவனம் 35 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுவரை டி சீரிஸ் வாங்கிய ஆடியோ உரிமைகளிலேயே இதுதான் அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு இருந்த ஜவான் ரிலீஸ் இப்போது செப்டம்பர் 7 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாமன்னன் பட வெற்றியை கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு