Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஜேசன் சஞ்சய் படத்தின் கதைக்களம் இதுவா… அட இந்த ஜானரில் எத்தனைப் படம்தான் எடுப்பாங்க?

ஜேசன் சஞ்சய் படத்தின் கதைக்களம் இதுவா… அட இந்த ஜானரில் எத்தனைப் படம்தான் எடுப்பாங்க?

vinoth

, வியாழன், 28 மார்ச் 2024 (08:10 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது மகன் சஞ்சய். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இவர் லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார்.

இந்நிலையில் கடந்த சில சில மாதங்களுக்கு முன்னர் இந்த படத்தின் பூஜை சென்னையில் ரகசியமாக நடந்துள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த பூஜையில் சஞ்சய்யின் தந்தை விஜய் கூட கலந்துகொள்ளவில்லை. அதன் பின்னர் முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வந்த நிலையில் தற்போது படத்துக்கான நடிகர் நடிகைகள் தேடும் படலம் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் ஒன்று இப்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இந்த படத்தின் கதையை கிரிக்கெட் பின்புலத்தில் சஞ்சய் எழுதியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் சினிமாவில் தற்போது அதிகளவில் கிரிக்கெட் சம்மந்தப்பட்ட படங்கள் வெளியாகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய் சேதுபதியை அடுத்து லேடி சூப்பர் ஸ்டாரை இயக்கும் நித்திலன்?