Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எங்க அக்காவுக்கு நிச்சயதார்த்தம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் அதிதி ஷங்கர்!

எங்க அக்காவுக்கு நிச்சயதார்த்தம்... மகிழ்ச்சியின் உச்சத்தில் அதிதி ஷங்கர்!

vinoth

, திங்கள், 19 பிப்ரவரி 2024 (11:12 IST)
இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும் தாமோதரன் என்பவருக்கும் திருமணம் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடந்தது. அப்போது கொரோனா கட்டுப்பாடுகள் இருந்ததால் எளிமையாக நடத்தப்பட்டது. அதையடுத்து மே 1 ஆம் தேதி வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக கொண்டாட ஷங்கர் குடும்பம் திட்டமிட்டது. அதையடுத்து திரையுலகினர் அனைவருக்கும் அழைப்பிதழ்களை கொடுத்து வந்தார் ஷங்கர்.

ஆனால் அந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சி திடீரென நிறுத்தப்பட்டது. இடையில் ஐஸ்வர்யா- தாமோதரன் தம்பதியினருக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக சொல்லப்பட்டது. அதன் பின்னர் இருவரும் சட்டபூர்வமாக விவகாரத்தைப் பெற்றனர்.

இந்நிலையில் இப்போது ஐஸ்வர்யாவுக்கும் தருண் கார்த்திகேயன் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. இவர் திரைத்துறையில் உதவி இயக்குனராக பணியாற்றுபவர் என்று சொல்லப்படுகிறது. நிச்சயதார்த்த புகைப்படங்களை அதிதி ஷங்கர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் விருதுகளை அள்ளிய நோலனின் ‘ஓப்பன்ஹெய்மர்’!