ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் படத்தின் முதல் லுக் போஸ்டர் ரிலீஸ் அப்டேட்!

vinoth
ஞாயிறு, 9 நவம்பர் 2025 (20:56 IST)
தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவர் விஜய். தற்போது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குனராக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இவர் கனடாவில் சினிமா சம்பந்தமாக படிப்பு படித்து வந்த  நிலையில், குறும்படம் ஒன்றை இயக்கியிருந்தார். இப்போது லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனத்துக்காக சந்தீப் கிஷன் மற்றும் ஃபரியா அப்துல்லா ஆகியோர் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார்.

கடந்த ஆண்டு இந்த படத்தின் பூஜை நடந்த நிலையில் ஆண்டு இறுதியில் படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. தற்போது படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சென்னை, இலங்கை மற்றும் பாங்காங்க் ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நடந்தது.

தற்போது இறுதிகட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் டைட்டில் மற்றும் முதல் லுக் போஸ்டர் நாளைக் காலை வெளியாகவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ஏழைக்கு கோபம் வந்தால் நேரடியாக அடிப்பான்; ஆனால், பணக்காரனுக்குக் கோபம் வந்தால்.. கவினின் ‘மாஸ்க்’ டிரைலர்..!

நாகார்ஜூனா படம் ரீரிலீஸ்.. சிரஞ்சீவியிடம் மன்னிப்பு கேட்ட ராம்கோபால் வர்மா.. என்ன காரணம்?

900 கோடி ரூபாய் வசூலை நெருங்கிய காந்தாரா-1… ஓடிடி ரிலீஸுக்குப் பிறகும் தொடரும் கலெக்‌ஷன்!

மீண்டும் தூசு தட்டப்படும் வெங்கட்பிரபுவின் ‘பார்ட்டி’… ரிலீஸ் அப்டேட்!

ஆட்டோகிராஃப் படத்தில் காதல் என்பது வெறும் கருவிதான்… சேரன் கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments