Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் ஜான்வி கபூர்!

Advertiesment
வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்கும் ஜான்வி கபூர்!
, வெள்ளி, 30 ஆகஸ்ட் 2019 (19:00 IST)
பாலிவுட்  சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக விளங்கிய மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். 


 
இதில் மகள் ஜான்வி கபூர் தொடர்ந்து நல்ல படங்களை தேர்வு செய்து நடிக்கும் முனைப்பில் இருக்கிறார்.  கடந்த வருடம் இவர் நடிப்பில் வெளியான 'தடக்'  திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து,  கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்வு செய்து நடிக்க ஆர்வம் காட்டுகிறார்.
 
அந்தவகையில் தற்போது  ஜான்வி கபூர் குஞ்ஜன் சக்சேனா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.  கரண் ஜோகர் தயாரித்துள்ள இப்படத்திற்கு "தி கார்கில் கேர்ள்" என்று பெயரிடப்பட்டுள்ளனர்.   இதில் பெண் ராணுவ பைலட் குஞ்ஜன் கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார். இதற்காக ஜான்வி தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டதோடு, 6 கிலோ எடை குறைத்துள்ளார்.
 
கார்கில் போர் சமயத்தில் காயம்பட்ட எண்ணற்ற இந்திய ராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக இடம் மாற்றி தஞ்சம் கொடுத்ததில் முக்கிய பங்கு வகித்தவர் குஞ்ஜன் சக்சேனா. இதற்காக குஞ்ஜன் சக்சேனாவுக்கு சவுர்ய சக்ரா விருது வழங்கப்பட்டது. இத விருதினை பெற்ற முதல் பெண்மணி இவர் தான். தற்போது இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை  கரண் ஜோகர் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் தற்போது குஞ்ஜன் சக்சேனாவின் வாழ்க்கை வரலாற்றை சொல்லும் படத்தின் "தி கார்கில் கேர்ள்" வருகிற மார்ச் 13ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஓவர் பில்டப் கொடுத்து பல்பு வாங்கிய லொஸ்லியா - வீடியோ!