Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இந்த பாலிவுட் பிரபலங்கள் செய்யும் வேலையை பாருங்கள் – வீடியோவை டேக் செய்த எம்.எல்.ஏ

Advertiesment
இந்த பாலிவுட் பிரபலங்கள் செய்யும் வேலையை பாருங்கள் – வீடியோவை டேக் செய்த எம்.எல்.ஏ
, புதன், 31 ஜூலை 2019 (17:44 IST)
பாலிவுட்டின் முன்னனி நடிகர், நடிகையர்கள் குடித்துவிட்டு கும்மாளம் போடுவதாக சிரோன்மனி அகாலிதளம் எம்.எல்.ஏ ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி இயக்குனர் கரன் ஜோஹர் நடத்திய வார இறுதி பார்ட்டியில் பிரபல நடிகர்கள் ரன்பீர் கபூர், அர்ஜூன் கபூர், ஷாகித் கபூர் மற்றும் வருண் தவான் உள்ளிட்டோரும், நடிகையரில் தீபிகா படுகோன், மலைக்கா அரோரா உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர். அங்கு அவர்கள் பார்ட்டி கொண்டாடுவதை கரன் ஜோஹர் வீடியோ எடுத்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்துள்ள அகாலிதளம் எம்.எல்.ஏ ட்விட்டரில் “மதிப்புமிக்க திரை பிரபலங்கள் போதையில் இருக்கும் நிலையை பாருங்கள். நான் இந்த நடிகர்களின் போதைப்பழக்கத்துக்கு எதிராக எனது குரலை உயர்த்துவேன். நீங்களும் இதை தட்டி கேட்க விரும்பினால் இந்த பதிவை ரீ ட்வீட் செய்யுங்கள்” என பதிவிட்டுள்ளார்.

இதற்கு பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகளும், எதிர்ப்புகளும் வலுத்து கொண்டு வருகின்றன. இந்த ட்வீட்க்கு பதிலளித்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிலிந்த் தியோரா “என் மனைவியும் அந்த விருந்தில் கலந்து கொண்டுள்ளார். அங்கு யாரும் போதை பொருட்களை பயன்படுத்தவில்லை. தயவு செய்து பொய்களை பரப்புவதை நிறுத்துங்கள். இதற்காக நீங்கள் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டாக வேண்டும்” என்று கூறியுள்ளார்.


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

"அல்ட்ரா மாடர்ன் இளைஞனை இயக்கும் ராம்" - சித்தார்த்தின் நடிப்பு சரித்திரம் பேசுமா?