கமல்& அன்பறிவ் படத்துக்கு மலையாள இசையமைப்பாளர்… வெளியான தகவல்!

vinoth
வியாழன், 20 நவம்பர் 2025 (14:58 IST)
கமல்ஹாசன், மணிரத்னம் கூட்டணியில் உருவான 'தக் லைஃப்'  படம் ஜூன் 5 ஆம் தேதி ரிலீஸாகி அட்டர் ப்ளாப் ஆனது. இதையடுத்து கமல்ஹாசன் ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் மாஸ்டர்ஸ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் ஜூலை அல்லது ஆகஸ்ட்டில் தொடங்கும் என சொல்லப்பட்டது. ஆனால் தக் லைஃப் படத்தின் தோல்வி மற்றும் கமல்ஹாசன் ராஜ்ய சபா உறுப்பினராக பதவியேற்றது போன்ற காரணங்களால் தாமதமாகிக் கொண்டே வந்தது.

இந்த படத்தின் திரைக்கதையை செப்பனிடும் பணிக்காக  மலையாள சினிமாவில் திரைக்கதை எழுத்தாளராகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஷ்யாம் புஷ்கரன் இணைந்துள்ளார். இவர் திரைக்கதையில் உருவான ‘மகேஷிண்டே பிரதிகாரம்’ மற்றும் ‘கும்பளாங்கி நைட்ஸ்’ ஆகிய படங்கள் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தற்போது இந்த படத்துக்கு இசையமைப்பாளராக ஜேக்ஸ் பிஜாய் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேக்ஸ் பிஜாய் சமீபத்தில் கமல் மற்றும் அன்பறிவ் ஆகியோரோடு எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஜேக்ஸ் பிஜாய் அய்யப்பனும் கோஷியும், போர்த் தொழில் போன்ற படங்களுக்கு இசையமைத்ததன் மூலம் பிரபலம் ஆனவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

ரி ரிலீஸுக்குத் தயாரான அஜித்தின் சூப்பர்ஹிட் திரைப்படம்!

இயக்குனர் எல்லை மீறினார்… நடிகர் மௌனம் காத்தார்… நடிகை திவ்யபாரதி ஆதங்கம்!

லோகா நாயகி கல்யாணி நடிக்கும் புதிய தமிழ்ப் படம்… பூஜையோடு தொடக்கம்!

என் கணவரப் பாத்தா DNA டெஸ்ட்டுக்கு வர சொல்லுங்க… ஜாய் கிரிசில்டா நக்கல் பதிவு!

காந்தாரா எஃபக்ட்டால் கருப்பு படத்தில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments