Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹிட் அடித்த 'ஜெயிலர்' படத்தின் 2 வது பாகம்...இயக்குனர் நெல்சன் தகவல்

Webdunia
திங்கள், 14 ஆகஸ்ட் 2023 (14:25 IST)
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில்,  நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். இப்படம்  ஆகஸ்ட் 10 ஆம்  தேதி  உலகம் முழுவதும் உள்ள தியேட்டர்களில் ரிலீஸானது.

ரஜினியுடன் இணைந்து  மோகன்லால், சிவராஜ்குமார், ஜாக்கிஷெராப், தமன்னா, ரம்யாகிருஷ்ணன்  உள்ளிட்ட பல நட்சத்திரங்கள்  நடிப்பில், அனிருத் இசையில்,  சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

இந்த நிலையில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி  காலை 9 மணிக்கு  வெளியான இப்படம், ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது. ரஜினி ரசிகர்கள் இப்படத்தைக் கொண்டாடி வருகின்றனர்.

இப்பட,ம் முதல் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில்,  இயக்குனர் நெல்சன் ஜெயிலர் படத்தின் 2 வது பாகம் எடுக்க உள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: ஜெயிலர் படத்தின் 2 வது பாகம் எடுக்கும் யோசனை இருக்கிறது. அதேபோல், கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட், ஆகிய படங்களின் 2 வது பாகம் எடுக்கும் திட்டம் இருக்கிறது என்று கூறியுள்ளார்.

மேலும், ரஜினி, விஜய் இருவரும் பெரிய மாஸ் நடிகர்கள். இவர்ககள் இருவரும் சேர்ந்து  நடிக்கும் ஒரு படத்தை இயக்க வேண்டும் என்ற ஆசையுள்ளது… நேரம் வரும் போது அதைச் செய்வேன் என்று தெரிவித்துள்ளார்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அர்ஜுன் இயக்கத்தில் உருவாகும் சீதா பயணம் டீசர் வெளியீடு… எப்படி இருக்கு?

எதிர்மறை விமர்சனங்களின் எதிரொலி… பாதியாகக் குறைந்த தக் லைஃப் படத்தின் காட்சிகள்…!

மகாராஜா வசூலில் பத்தில் ஒரு மடங்குதான்… VJS ன் ‘ஏஸ்’ பட வசூல் விவரம்!

ஒன்பது கிரகங்களில் உச்சம் பெற்ற ஒருவன்… அஜித்தின் அடுத்த படத்துக்கும் சாய் அப்யங்கர்தான் இசையா?

மனுசி படத்தை மீண்டும் பார்த்து மறு ஆய்வு செய்ய சென்சார் போர்டு சம்மதம்.. !

அடுத்த கட்டுரையில்
Show comments