நெல்சன் பீஸ்ட் படத்திற்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் இயக்கி வரும் படம் ஜெயிலர்.
இப்படத்தில், ரஜினிகாந்த் முத்துவேல் பாண்டியன் எனும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் மோகன்லால், சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷ்ராஃப் என பல முக்கிய நடிகர்கள் நடிப்ப்பில் பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது.
அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தற்போது இப்படத்தின் இறுதிகட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் விநாயகன் நேற்று தன் டப்பிங் பணியை நிறைவு செய்தார். இதுகுறித்த புகைப்படங்கள் வைரலானது.
இந்த நிலையில், ஜெயிலர் படத்தில் ஓவர்சீஸ் வெளியீட்டு உரிமையை ஐங்கரன் இண்டர் நேசனல் நிறுவனம் பெற்றுள்ளதாக இன்று தன் டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.