Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

5 நடிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்… காரணம் என்ன?

Advertiesment
5 நடிகர்களுக்கு கட்டுப்பாடு விதித்த தயாரிப்பாளர் சங்கம்… காரணம் என்ன?
, திங்கள், 19 ஜூன் 2023 (07:57 IST)
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக மீண்டும் தேனாண்டாள் முரளி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் இப்போது ஒரு முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

அதன் படி தயாரிப்பாளர்களுக்கு சரியான ஒத்துழைப்பு வழங்காத 5 நடிகர்களுக்கு புதிதாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களை ஒப்பந்தம் செய்வதற்கு முன்பாக தயாரிப்பாளர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் அனுமதி கடிதம் பெற வேண்டும் என கூறியுள்ளார்.

அந்த 5 நடிகர்கள் யார் யார் என்பதை பேச்சுவார்த்தை நடத்திவிட்டு அதன் பின்னர் கூறுவோம் எனத் தெரிவித்துள்ளார். அவரின் இந்த அறிவிப்பு தமிழ் திரையுலகினர் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த 5 நடிகர்கள் யாராக இருக்கும் எனற் கேள்வியும் எழுந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹூனியர் என் டி ஆரின் முதல் பாலிவுட் படத்தில் இணைந்த நடிகை!