Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஆஸ்கர் யுடியூப் பக்கத்தில் ஜெய்பீம்… இயக்குனர் பேட்டியும் இடம்பிடித்தது!

ஆஸ்கர் யுடியூப் பக்கத்தில் ஜெய்பீம்… இயக்குனர் பேட்டியும் இடம்பிடித்தது!
, செவ்வாய், 18 ஜனவரி 2022 (14:35 IST)
கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஜெய்பீம் திரைப்படத்தின் சில காட்சிகள் ஆஸ்கர் யுடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது.

சூர்யா நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் உருவான படம் ஜெய்பீம். ஓடிடியில் வெளியான இந்த படம் இருளர் பழங்குடி மக்களின் வாழ்வில் நடக்கும் துயரங்களை பதிவு செய்ததால் பரவலாக நல்ல பாராட்டையும், விமர்சனங்களையும் பெற்றது. சில சர்ச்சைகளை சந்தித்தாலும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இந்த படம் இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்படலாம் என கருதப்பட்ட நிலையில் அது நிகழவில்லை. இந்நிலையில் இப்போது இந்த படத்தின் சில காட்சிகள் ஆஸ்கர் யுடியூப் பக்கத்தில் இடம்பெற்றுள்ளது. அதோடு படத்தின் இயக்குனர் ஞானவேலின் படத்தைப் பற்றிய கருத்தும் இடம்பெற்றுள்ளது. இந்த மரியாதையைப் பெறும் முதல் இந்தியப் படம் ஜெய் பீம்தான்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மாடர்ன் உடையில் நச்சுனு போஸ் கொடுத்த நடிகை ராய் லட்சுமி!