ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கார்ஜியஸ் போட்டோஷூட் ஆல்பம்!

vinoth
வெள்ளி, 12 செப்டம்பர் 2025 (14:22 IST)
தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என பலமொழிகளில் சூப்பர் ஸ்டார் நடிகையாக திகழ்ந்தவர் ஸ்ரீதேவி. அவர் சில ஆண்டுகளுக்கு முன்னர் துபாயில் இயற்கை எய்தினார். இதையடுத்து அவரின் மூத்தமகளான ஜான்வி கபூர் சினிமாவில் அறிமுகமாகி நடித்து வருகிறார்.

பாலிவுட் படங்களில் மட்டும் நடித்து வந்த அவர் தெலுங்கில் ஜூனியர் என் டி ஆர் நடித்த தேவரா படத்தில் கதாநாயகியாக நடித்தார். அதையடுத்துத் தற்போது ராம்சரணோடு பெட்டி படத்தில் நடித்து வருகிறார். ஜான்வி இன்னும் தமிழ் சினிமாவில் நடிக்கவில்லை என்றாலும்  அவரின் இன்ஸ்டாகிராம் புகைப்படங்களுக்காகவே ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.

சமீபத்தில் ஜான்வி கதாநாயகியாக நடித்த பரமசுந்தரி திரைப்படம் வெற்றி படமாக அமைந்தது. இதையடுத்து அவர் தனது தாயாரின் சூப்பர் ஹிட் படமான ‘சால்பாஸ்’ படத்தின் ரீமேக்கில் நடிக்கவுள்ளார். 1989 ஆம் ஆண்டு வெளியான சால்பாஸ் திரைப்படத்தில் ஸ்ரீதேவி இரட்டை வேடத்தில் நடிக்க ரஜினிகாந்த் மற்றும் சன்னி தியோல் ஆகியோர் மற்ற முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இந்த படம் தமிழில் வெளியான வாணி ராணி படத்தின் (இந்தி ஒரிஜினல் சீதா அவுர் கீதா) படத்தின் கதையைத் தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Janhvi Kapoor (@janhvikapoor)

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் இணையும் ராஜமௌலி & ஜூனியர் என் டி ஆர்… பயோபிக் படமா?

விஜய் சேதுபதி நடிப்பில் பாலாஜி தரணிதரன் இயக்கும் படத்தில் இவர்தான் ஹீரோயின்!

ஹீரோவாகும் அறிமுகமாகும் லோகேஷ் கனகராஜ் சம்பளம் இத்தனை கோடியா?

பல சிக்கல்களைக் கடந்து ஒரு வழியாக க்ளைமேக்ஸுக்கு வந்த ‘தி ராஜாசாப்’ படப்பிடிப்பு!

ஜனநாயகன் தமிழக விநியோக உரிமை வியாபாரத்தில் எழுந்த சிக்கல்…!

அடுத்த கட்டுரையில்
Show comments