Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 18 March 2025
webdunia

அன்னைக்கு கொஞ்சம் ஓவரா React பண்ணிட்டார்…. வில் ஸ்மித் மனைவியின் அதிர்ச்சி கருத்து!

Advertiesment
அன்னைக்கு கொஞ்சம் ஓவரா React பண்ணிட்டார்…. வில் ஸ்மித் மனைவியின் அதிர்ச்சி கருத்து!
, திங்கள், 11 ஏப்ரல் 2022 (09:33 IST)
ஆஸ்கர் மேடையில் நடந்த சம்பவம் குறித்து பேசியுள்ள வில் ஸ்மித்தின் கருத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆஸ்கர் விருது விழா நடைபெற்றபோது தனது மனைவி குறித்து அவமரியாதையாக பேசியதாக தொகுப்பாளர் கிரிஸ் ராக் என்பவரை நடிகர் வில் ஸ்மித் மேடையில் பளார் என கன்னத்தில் அறைந்தார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்பதும், அதன்பின் தனது செயலுக்கு வில்ஸ்மித் வருத்தம் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஆஸ்கர் விருது வழங்கும் விழா மற்றும் மற்ற நிகழ்வுகளில் கலந்துகொள்ள நடிகர் வில் ஸ்மித்துக்கு 10 ஆண்டுகள் தடை விதித்து அகடமி நடவடிக்கை எடுத்துள்ளது.

விழா மேடைக்கு சென்ற தொகுப்பாளரை தாக்கியதால் இந்த நடவடிக்கை என்றும் அகாடமி விளக்கம் அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த தடை உத்தரவை ஏற்றுக்கொள்வதாக தற்போது வில் ஸ்மித் அறிவித்துள்ளார். ஏற்கனவே இது சம்மந்தமாக அவர் கிறிஸ் ராக்கிடம் மன்னிப்புக் கேட்டிருந்தது குறிப்பிடத்தகக்து.

இந்நிலையில் மேடையில் நடந்த சம்பவம் குறித்து வில் ஸ்மித்தின் மனைவின் ஜேடா பின்கெட்டின் கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் ‘அன்று ஆஸ்கர் மேடையில் வில் ஸ்மித் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு அளவுக்கு அதிகமாக எதிர்வினையாற்றி விட்டார்’ என்று கூறியுள்ளார். ஜேடாவின் இந்த கருத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விஜய்யின் மேலும் ஒரு நாட்டில் தடையா? வெளியான பரபரப்பு தகவல்!