இயக்குனர் ஷங்கர் இயக்கும் 2.0 படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இடம் பெறும் சில காட்சிகள் இடம் பெறுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் முதல் பாகமான எந்திரன் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஐஸ்வர்யாராய் நடித்திருந்தார். தற்போது, அவர் அதிக படங்களில் நடிப்பதில்லை. ஆனால், எந்திரன் படத்தின் தொடர்ச்சியான 2.0-வில், ஐஸ்வர்யாவின் கதாபாத்திரம் இல்லாமல் எப்படி கதை நகரும் என யோசித்த ஷங்கர் அதற்காக சில யுக்திகளை கையாண்டுள்ளார்.அதாவது, விஞ்ஞானி வசீகரனிடம் அடிக்கடி அவர் தொலைபேசியில் பேசுவது போல் காட்சி அமைக்கப்பட்டுள்ளதாம். ஒரு சில குளோஸ் அப் காட்சிகளை அவரை வைத்து படம்பிடிக்கவும் ஷங்கர் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், முதல் பாகத்தில், வசீகரன் தயாரித்த சிட்டி வில்லனாக மாறி பல குடைச்சலை கொடுத்ததால், இந்த பாகத்தில் நிலா (எமி ஜாக்சன்) எனும் உணர்ச்சிகளே இல்லாத பெண் ரோபோவை அவர் உருவாக்குவது போலவும், அந்த பெண் ரோபோவால் ஏற்படும் பிரச்சனைகளே கதைக்களம் எனத் தெரிகிறது.