Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பாகுபலி-2 படத்தில் சர்ச்சை வசனம் : ராஜமௌலி மீது காவல் நிலையத்தில் புகார்

Advertiesment
SS Rajamouli
, புதன், 3 மே 2017 (09:01 IST)
பாகுபலி-2 படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு வசனம் தங்கள் சமூகத்தை இழிவுபடுத்தியுள்ளதாக, ஆந்திராவை சேர்ந்த ஒரு குறிப்பிட்ட சாதிப்பிரிவினர், ஹைதராபாத் பஞ்சாராஹில்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.


 

 
ஆந்திராவில் வசிக்கும் அரீகதிகா பொரடா சமிதி வாழ் சமூகத்தை சேர்ந்தவர்கள்தான் இந்த புகாரை அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரில் “பாகுபலி2 படத்தில் இயக்குனர் ராஜமௌலி எங்கள் சமூகத்தை தவறாக சித்தரித்துள்ளார். ஒரு காட்சியில் நடிகர் சத்யராஜ் பேசும் ஒரு வசனத்தில் ‘கதிகா சீக்கட்டி’ எனக் கூறுகிறார். இது எங்கள் சாதியை ஒடுக்குவதற்கு சமம். மேலும், நாங்கள் மனிதாபிமானமற்ற சமூக விரோதிகள் போல் சித்தரிக்கப்பட்டுள்ளோம். இது எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை புண்படுத்துவதாக அமைந்துள்ளது. எனவே, தணிக்கை அதிகாரிகள் உடனடியாக அந்த வசனத்தை நீக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நடிகையாகிறார் மைக்கேல் ஜாக்சனின் மகள்