யுவன் ஷங்கர் ராஜாவைப் பிரிகிறாரா வெங்கட் பிரபு?... சிவகார்த்திகேயன் படத்துக்கு இவர்தான் இசையாம்!

vinoth
சனி, 19 ஜூலை 2025 (09:52 IST)
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய்யின் நடிப்பில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ரிலீஸான கோட் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெற்று 455 கோடி ரூபாய் வசூலித்தது. இதையடுத்து வெங்கட்பிரபு அடுத்து யாரை வைத்து இயக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

ஆனால் இதுவரை அது சம்மந்தமாக எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது. தற்போது அவரின் அடுத்தப் படம் பற்றி ஒரு தகவல் வெளியாகியுள்ளது. வெங்கட் பிரபு அடுத்து சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க, அந்த படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. வழக்கமாக வெங்கட்பிரபுவின் அனைத்து படங்களுக்கும் யுவன்தான் இசையமைப்பார். பார்ட்டி மற்றும் மன்மத லீலை ஆகிய படங்களுக்கு மட்டும் பிரேம்ஜி இசையமைத்திருந்தார். இப்போது முதல் முறையாக அனிருத் வெங்கட்பிரபு படத்துக்கு இசையமைக்கவுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

மீண்டும் தள்ளிப்போகும் சிவகார்த்திகேயன் வெங்கட் பிரபு படம்!

ரிலீஸுக்குத் தயாரான கங்கனா- மாதவன் நடிக்கும் தமிழ்ப் படம்!

அடங்காத பார்வதி! ராணுவ ஆட்சியை அமல்படுத்திய ப்ரவீன்! பிக்பாஸ் வீட்டில் ரணகளம்!

சமந்தா நடிக்கும் ‘மா இண்டி பங்காரம்’ படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்!

ஆபாச தளங்களில் நடிகர் சிரஞ்சீவியின் வீடியோ.. சைபர் க்ரைம் போலீசில் புகார்..!

அடுத்த கட்டுரையில்
Show comments