Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ஜென்டில் மேன் 2 முதல் கட்ட படப்பிடிப்பு நிறைவு பெற்றது!

Advertiesment
gentleman 2
, செவ்வாய், 31 அக்டோபர் 2023 (14:51 IST)
மெகா தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன் ஜென்டில்மேன் பிலிம் இண்டர்னேஷ்னல் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் 'ஜென்டில்மேன்-2'.


 
A.கோகுல் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில், சேத்தன்  கதாநாயகனாக நடிக்கிறார். நயன்தாரா சக்ரவர்த்தி , பிரியா லால் ஆகியோர் கதா நாயகிகளாக நடிக்கிறார்கள். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னை மற்றும் சுற்று புறங்களில் பதினைந்து நாட்கள் நடைபெற்று நிறைவுற்றது.

இதில், சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், படவா கோபி, சுதா ராணி, சித்தாரா, ஶ்ரீ லதா, கண்மணி, ' லொள்ளு சபா ' சாமிநாதன், பேபி பத்ம ராகா மற்றும் முல்லை - கோதண்டம் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் படத்தின் முக்கியமான ஒரு சண்டை காட்சியும் படமாக்கப்பட்டது. ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் காசி இதை படமாக்கினார்.

பிரம்மாண்ட காட்சிகள் நிறைந்த அடுத்த கட்ட படப்பிடிப்பு நவம்பர் மூன்றாம் வாரம் சென்னை ஹைதராபாத்  மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் நடைபெறும். நான்கு கட்டங்களாக  மலேஷியா, துபாய், ஶ்ரீலங்கா ஆகிய நாடுகளில் படப்பிடிப்பு நடை பெற உள்ளது.

இப்படத்தில் சேத்தன், நயன்தாரா சக்ரவர்த்தி, பிரியா லால், சுமன், மனோஜ் k ஜெயன், பிராச்சிகா, ' காந்தாரா 'வில்லன் அச்சுத் குமார், படவா கோபி, முனிஷ் ராஜா, ஆர்.வி.உதயகுமார், சென்றாய்ன், மைம் கோபி ,ரவி பிரகாஷ், ஷிஷிர் ஷர்மா, வேலா ராம மூர்த்தி, ஜான் மகேந்திரன், கல்லூரி விமல், ' ஜிகர்தண்டா ' ராம்ஸ்,  பிரேம் குமார், இமான் அண்ணாச்சி, முல்லை, கோதண்டம், ஶ்ரீ ராம், ஜான் ரோஷன்,' லொள்ளு சபா ' சாமிநாதன், ஜார்ஜ் விஜய், நெல்சன், சித்தாரா, சுதா ராணி, ஶ்ரீ ரஞ்சனி, சத்ய பிரியா, கண்மணி , மைனா நந்தினி,ஶ்ரீ லதா, கருண்யா, பேபி பத்ம ராகா, பேபி அனீஷா என ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட பிரபல நடிகர் நடிகைகள் முக்கிய கதபாத்திரங்களில் நடிக்கிறார்கள் என்பது சிறப்பு அம்சமாகும்.

இசை அமைப்பாளர் ஆஸ்கார் நாயகன் எம்.எம்.கீரவாணி , கவி பேரரசு வைரமுத்து கூட்டணியின் ஏழு பாடல்கள் படத்தில் இடம் பெறுகிறது.
அஜயன் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்கிறார்.  தோட்டா தரணி கலை இயக்குநராக பணியாற்றுகிறார்.

படத்தொகுப்பு - சதீஷ் சூரியா, நடனம் - பிருந்தா, ஆடை வடிவமைப்பு - பூர்ணிமா ராமசாமி, ஸ்டைலிஸ்ட் செரீனா டிசெரியா,
தயாரிப்பு மேற்பார்வை - முருகு பூபதி, சரவண குமார், ஆகியோர் தொழில் நுட்ப கலைஞர்களாக பணியாற்றுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வெண்ணிற ஆடையில் கிளாமர் போட்டோஷூட் நடத்திய லாஸ்லியா!