Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷாலுக்கும் தன்ஷிகாவுக்கும் இவ்வளவு வயது வித்தியாசமா? - ரசிகர்கள் ஆச்சர்யம்!

Advertiesment
Vishal Sai Dhanshika Love

Prasanth Karthick

, செவ்வாய், 20 மே 2025 (09:51 IST)

நீண்ட காலமாக திருமணம் செய்யாமல் இருந்து வந்த நடிகர் விஷால், சாய் தன்ஷிகாவை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள செய்திதான் தற்போது கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேச்சாக மாறியுள்ளது.

 

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராகவும், தயாரிப்பாளராகவும் இருந்து வருபவர் விஷால். இன்னும் திருமணமாகாமல் இருந்து வரும் நடிகர் விஷாலுடன் சில நடிகைகளை இணைத்து கிசுகிசுக்கப்படுவதும் தொடர் கதையாகவே இருந்து வந்தது. ஆனால் விஷாலுடன் கிசுகிசுவில் கூட இல்லாமல் யாருமே எதிர்பாராத விதமாக அவரை திருமணம் செய்து கொள்ள உள்ளார் நடிகை சாய் தன்ஷிகா.

 

நேற்று சாய் தன்ஷிகா நடித்த ‘யோகிடா’ பட நிகழ்ச்சியில் விஷாலும், தன்ஷிகாவும் திருமணம் செய்துக் கொள்ளப் போவதை இயக்குனர் ஆர்.பி.உதயக்குமார் அறிவிக்க, அவர்களும் அதை ஒப்புக் கொண்டுள்ளனர். இருவரும் நீண்ட காலமாக நண்பர்களாக இருந்து வந்தாலும், சமீபத்தில்தான் காதல், திருமணம் குறித்து முடிவு செய்ததாக தன்ஷிகா கூறியுள்ளார். ஆகஸ்டு 29ல் திருமணம் செய்ய இருப்பதாக அவர்கள் கூறியுள்ளனர்.

 

தற்போது நடிகர் விஷாலுக்கு 47 வயதாகிறது. சாய் தன்ஷிகாவிற்கு 35 வயதுதான் ஆகிறது. இருவருக்கும் இடையே 12 வயது வித்தியாசம் உள்ளது. எனினும் இருவருக்கும் இடையே வயது வித்தியாசம் இல்லாமல் காதல் மலர்ந்து திருமணம் வரை சென்றுள்ளது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அவர்களுக்கு ரசிகர்கள் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஜெண்டில் வுமன் இயக்குனரின் அடுத்த படத்தில் விஜய் ஆண்டனி… டைட்டில் அறிவிப்பு!