ரகசியமாக நடந்ததா நயன்தாரா-விக்னேஷ் சிவன் நிச்சயதார்த்தம்?

வியாழன், 29 மார்ச் 2018 (15:22 IST)
நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை வருங்கால கணவர் என்று அண்மையில் நடந்த விருது விழாவில் தெரிவித்துள்ளார். 
நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. ஆனால் காதல் பற்றி கேட்டால் இருவரும் பதில் அளிக்காமல் இருந்தனர். இந்நிலையில் அண்மையில் நடந்த விருது விழாவில் விக்கியை வருங்கால கணவர் என்றார் நயன்தாரா. மேலும் விக்னேஷ் சிவனுடன்  நிச்சயதார்த்தம் முடிந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் கேரளாவில் ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்ததாம். இந்த நிச்சயதார்த்தத்தில் இருவீட்டார் மட்டுமே கலந்து கொண்டதாகவும், நிச்சயதார்த்தத்தை முடித்த கையோடுதான் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் அமெரிக்காவுக்கு சென்றனர் எனவும் கூறப்படுகிறது.  அவர்களின் திருமணம் இந்த வருட இறுதியில் நடக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

அடுத்த கட்டுரையில் வெளிநாடுகளில் படமாகிவரும் விஜய் சேதுபதி படம்