Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

விஷால் தான் 'தமிழ் ராக்கர்ஸ்' உரிமையாளரா? சுரேஷ் காமாட்சி அதிர்ச்சி குற்றச்சாட்டு

Advertiesment
suresh kamatchi
, வியாழன், 15 நவம்பர் 2018 (22:53 IST)
புதிய திரைப்படங்கள் வெளியாகும் அன்றைய தினமே வெளியிட்டு தமிழ் ராக்கர்ஸ் இணையதளம் அதிர்ச்சி அளித்து வருகிறது. அதிலும் முன்கூட்டியே சவால்விட்டு 'சர்கார்' போன்ற பெரிய பட்ஜெட் திரைப்படங்களையே வெளியிட்டு வரும் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை ஒட்டுமொத்த தமிழ்த்திரையுலகமும் சேர்ந்தே ஒன்றும் செய்ய முடியவில்லை

தயாரிப்பாளர் சங்கத்தலைவராக பொறுப்பேற்றவுடன் ஒருசில மாதங்களில் தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்தை முடக்குவோம் என்று சவால்விட்ட விஷால், இத்தனை மாதங்கள் ஆனபோதிலும் எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று ஒருசில தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

webdunia
இந்த நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, 'தமிழ் ராக்கர்ஸ் இணையதளமே விஷாலுக்கு சொந்தமானதாக இருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் தயாரிப்பாளர் சங்கத்தில் ரூ.7 கோடி வரை முறைகேடு நடந்திருப்பதாகவும், விஷாலுக்கு தெரியாமல் இந்த மோசடி நடந்திருக்க வாய்ப்பில்லை என்றும் அவர் தனது பேட்டியில் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்