சூர்யாவின் ‘கருப்பு’ படத்தில் எழுத்தாளராகப் பணியாற்றியுள்ளாரா கிரிக்கெட் வீரர் அஸ்வின்?

vinoth
புதன், 23 ஜூலை 2025 (13:41 IST)
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் கருப்பு படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ள நிலையில் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  படத்தில் சூர்யா வழக்கறிஞர் மற்றும் கருப்பு ஆகிய இரு வேடங்களில் நடிப்பதாக தெரிகிறது.

கடந்த சில ஆண்டுகளாக சூர்யாவுக்கு திரையரங்க ஹிட்டாக எந்த படமும் அமையவில்லை. அவரின் சமீபத்தைய ஹிட்டான ‘சூரரைப் போற்று’ மற்றும் ‘ஜெய் பீம்’ கூட ஓடிடிகளில் ரிலிஸாகிதான் வெற்றி பெற்றன. இதனால் சூர்யா தியேட்டர் ரிலீஸில் ஒரு பெரிய ஹிட் கொடுக்க கடுமையாகப் போராடிக் கொண்டிருக்கிறார். அதை நிகழ்த்தும் விதமாக ‘கருப்பு’ திரைப்படம் மாஸ் மசாலா சினிமாவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இந்த டீசரின் கிரடிட்ஸில் எழுத்தாளர்கள் என குறிப்பிட்டு நான்கு பெயர்கள் இடம்பெற்றுள்ளன. அதில் முதல் பெயராக அஸ்வின் ரவிச்சந்திரன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் இது கிரிக்கெட் வீரர் அஸ்வின்தான் என நம்பத் தொடங்கியுள்ளனர். ஆனால் அஸ்வின் எப்போழுதும் தனது பெயரை ‘ரவிச்சந்திரன் அஸ்வின்’ என்றுதான் குறிப்பிடுவார் என்பதால் இது வேறு அஸ்வின் ரவிச்சந்திரனாக இருக்கலாம் எனத் தெரிகிறது. இதுபற்றி படக்குழுவோ அல்லது அஸ்வின் தரப்போ தெளிவுபடுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

சினிமா செய்தி

அனிருத் கிட்ட இல்லாதது சாய்கிட்ட இருக்கு.. அதான் அவர் காட்டுல மழை.. என்ன தெரியுமா?

மாடர்ன் உடையில் கவர்ந்திழுக்கும் லுக்கில் அசத்தும் மாளவிகா மோகனன்!

பர்ப்பிள் நிற சேலையில் அசத்தும் அதுல்யா ரவி… வைரல் க்ளிக்ஸ்!

விஜய்யால் டெபாசிட் கூட வாங்க முடியாது… இயக்குனர் ராஜகுமாரன் கணிப்பு!

மால போட்ட நேரத்துல இப்படி ஒரு பாட்டா… பாக்யராஜின் குறும்பால நெளிந்த இளையராஜா!

அடுத்த கட்டுரையில்
Show comments