நெட்பிளிக்ஸ் தளத்தில் சில நாட்களுக்கு முன்னர் வெளியான பாவக்கதைகள் வெற்றி பெற்றதை அடுத்து அதன் இரண்டாம் சீசன் உருவாக உள்ளதாக சொல்லப்படுகிறது.
ஒரே மாதிரியான கதைக் கருவைக் கொண்ட சில குறும்படங்களை இணைத்து ஒரு திரைப்படமாக எடுப்பது ஆந்தாலஜி எனப்படுகிறது. உலக அளவில் மிகவும் பிரசித்தி பெற்று வரும் இந்த வகையான ஜானர் படங்கள் இப்போது அதிகளவில் வெளிவர ஆரம்பித்துள்ளன. வைல்டு டேல்ஸ் எனும் அர்ஜெண்டினிய படம் இந்த ஜானரில் வெளிவந்து உலக அளவில் அங்கிகாரம் பெற்றதை அடுத்து இப்பொது உலகெங்கும் பல மொழிகளில் அதுபோல படங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
இதையடுத்து தமிழில் நெட்பிளிக்ஸ் தொடருக்காக இயக்குனர் வெற்றிமாறன், சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன் மற்றும் கௌதம் மேனன் இயக்கத்தில் பாவக்கதைகள் என்ற பெயரில் ஒரு ஆந்தாலஜி திரைப்படம் வெளியானது. இந்த படங்களின் கதைகள் எல்லாம் ஆவணக் கொலைகளை மையப்படுத்தி உருவாக்கப்பட்டன. இவை வெற்றி பெற்றதை அடுத்து அடுத்து மீண்டும் இதே இயக்குனர்களின் இயக்கத்தில் ஆந்தாலஜி படத்தை எடுக்க உள்ளதாம் நெட்பிளிக்ஸ். இதற்கான ஆரம்பக் கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.