Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

முத்தையா இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்… கோலிவுட்டில் பரவும் செய்தி!

முத்தையா இயக்கத்தில் நடிக்கிறாரா கமல்… கோலிவுட்டில் பரவும் செய்தி!
, திங்கள், 7 மார்ச் 2022 (14:49 IST)
நடிகர் கமல்ஹாசன் இயக்குனர் முத்தையாவிடம் கதைக் கேட்டுள்ளதாக தகவல் ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது.

சசிக்குமார் நடித்த குட்டிப் புலி மற்றும்  கார்த்தி நடித்த கொம்பன் ஆகிய படங்களை இயக்கியவர் முத்தையா, அவர் படங்களில் சாதியக் கருத்துகள் இடம்பெற்று வருவதாக ஒரு குற்றச்சாட்டு அவர் மேல் வைக்கப்படுகிறது. ஆனாலும் தென் மாவட்டங்களில் அவர் படங்கள் நல்ல வெற்றியைப் பெறுகின்றன. இந்நிலையில் சமீபத்தில் அவர் கௌதம் கார்த்தியை வைத்து இயக்கிய தேவராட்டம் திரைப்படம் சர்ச்சைகளை ஏற்படுத்தி வெற்றி பெற்றது. அதன் பின்னர் விக்ரம் பிரபு மற்றும் லஷ்மி மேனன் ஆகியவர்களை வைத்து உருவாக்கிய புலிக்குத்தி பாண்டி திரைப்படம் நேரடியாக சன் தொலைக்காட்சியில் வெளியானது.

இப்போது கார்த்தியை வைத்து அவர் விருமன் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்நிலையில் கமல்ஹாசன் கிராமத்து கதை ஒன்றில் நடிக்க ஆர்வமாக இருப்பதாகவும், அதற்காக முத்தையாவிடம் கதைக் கேட்டுள்ளதாகவும் ஒரு தகவல் பரவி வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூரமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. கமல்ஹாசன் ஏற்கனவே வெற்றிமாறன் மற்றும் பா ரஞ்சித் ஆகியோரிடம் இதுபோல கதைக் கேட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தகக்து.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஹெச் வினோத்தை லிஸ்ட்டில் இருந்து தூக்கிய விஜய்? ஏன் தெரியுமா?